சனி, 19 பிப்ரவரி, 2011

அறிவுடைமை

அறிவு அறிவு அகுதில்லையேல் மாந்தர்க்கு
செறிவு செறிவு அனைத்திலும்
வயிற்றுபசி உடையாரை வறுமை வாட்டினாலும்
அறிவுபசி அவருடையது மாறா
கற்பது அறிவு பெருக்கதிற்கே அதை
ஏற்பது சால நன்றாம்
சுயபுத்தி சொல்புத்தி கேட்டறிவு இவை
மாந்தர்க்கு அவசியமான அறிவுஎன்றறி
அறிவாளர் அறிவியலாளர் இவர்தம்மை என்றும்
உலகம் நினைத்து பாராட்டும்

புதன், 16 பிப்ரவரி, 2011

எல்லோரும் மனிதர்களே நற்காரியம் செய்தல்பொருட்டு
எல்லோர்க்கும் அவைஅஞ்சாமை அவசியம்
புனிதனாக அவை புகுந்து சொல்பொருள்வகை
விளம்பி வெற்றிகாணுதல் தொகை
குற்றமற்றோர் குறிப்பறிந்து அவையில் செயல்படுவர்
அவர்தம் அஞ்சார் அவைக்கு
செயற்காரியம் அவையில்செய்தால் பொறாமைகொண்டு கருவுதல்
செயற்பொருளாகி கெடசெய்கின்றனர் தகுமோஅது
அவையில் இடம்பெற நீயும் தகுதியானவன்
உன் முறைவரும்போது கருவினால்
உனக்கு ஏற்படும் சோகம் மற்றவனுக்கும்
உண்டாகும் என்பதை அறி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

இன்னா சொல்

மனமாறுபாடு அடைவதுடன் அத்துமீறினால் கோபதால்யாதேனும்
மன்னிக்க முடியாதுரைப்பது இன்னாசொல்
சோகத்தின் உச்ச உரைத்தல் இன்னாச்சொல்
சோகம்தீர இறைவன்பெயர் சொல்
மனமாறுபாடு சக்தி இன்றி முடியாதநிலையில்
மன கொந்தளிப்பு இன்னாச்சொல்
வலு உடையவன் ஏளியவனை இகழ்தல்கூடாது
ஏனின் அவன்வலுவாயுள்ளபோது நிகழியயாம்
ஒற்றுமை பகிர்வு உதவி வழங்கல்
மனமாறுபாட்டை தவிர்க்கும் அறி

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மருந்து

நோய்தீர பாவம்தீர புண்ணியம் ஒங்க
நோய் தீர்ப்பது மருந்து
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அளவான உணவு அறிவைபெருக்கும்
கால்பங்கு உணவு மீதகால்பங்கு தண்ணீர்
கவலையின்றி உண்போர் அறிவுடையோர்
மனிதஉடம்பு ஏற்கும் அளவு நோயின்தன்மையறிந்தே
மருந்து செயலாக்கம்செய்வர் மருத்துவர்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அறன் வலியுறுத்தல்

அறன் அமைச்சு அதிகாரபூர்வ காவலர்கள்
அதுதேற்றுமரசன் அன்பு அனைதுமுமாம்
மக்கள் பிழையின்றி வாழ்ந்தால் மன்னன்
மாதவம் ஏற்க வேண்டா
அதிகாரபூர்வ காவலர்கள் அடக்கம் அறிவு
அதுதேற்றும் நல்லோர்தம் மாண்பு
தொடர்செயல் கயமையறிதல் அதனூடே புகுதல்
தொல்லை இல்லா வாழ்வுதரும்
கயமைவிட்டு விலகினால் பெரும் நன்மை
காலத்திற்கும் தரும் விலகுவோற்கு

திங்கள், 7 பிப்ரவரி, 2011

அன்பு

அன்பு இல்லேல் அனைத்தும் இல்
அன்பு அக்தாக்கும் அனைத்தும்
அணுக்கள் அன்பினால் ஒன்றிணைந்தால் அகுதுஆக்கும்
அனைத்தும் எனில் பிறஏன்
அணு அது அனைத்திலும் உண்டு
சிறு கிருமிகூட அதுகொள்ளும்
கொள்ளா நோன்பு கொள்ளும் முகலாயர்கள்
கொள்வர் புனிதம் எனும்னோன்பு
கொள்ளப்படும் மனிதர் யாராயினும் புனிதம்
கொண்டு மீள்க மறுமைக்கு

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தகுதி

தகுதி இல்லாமல் தற்பெருமை பேசுபவன்
தன்னிலை மறந்த மூடன்
யார் என அறியாவிடினும் நல்லோர்
சொல் கேட்போர் மிகுவர்
பொய் சொல்லி பணம் கொடுத்து
தகுதியை பெறுபவன் தூற்றபடுவான்
பொறாமை கொண்டு தகாதன செய்பவன்
பொய்தே போவான் என்பதறி
வஞ்சகம் தனை வீழ்த்த சூழ்ச்சி
செய்தல் தவறு அல்ல

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நன்மை

நன்று கூறுதல் நன்று அதுவல்லது
நன்று அமைதல் நன்று
நல்லன செய்தல் உலகிற்கு நன்றாம்
நல்லனஅல்லா செய்யாது விடுக
எதிர்மறையான வாழ்கையில் ஐந்து மறையும்
என்றும் கற்றல் இனிது
நான்கு வேதமும் உரைப்பது ஏற்றால்
நல்ல மனிதனாவாய் என்பதியல்பு
மூன்று கடவுள்களையும் தொழுதால் முப்பிறவிக்கும்
முறையான நன்மை விளையும்
இரண்டகவுள்ள அவையகம் செயல்புரிதல்போல் இருவிணமும்
ஒருங்கே அமைதல் சிறப்பு

புதன், 2 பிப்ரவரி, 2011

நரகம் - கருப்புவட்டம் - வானம்

உயிருள்ள ஆத்மா பிட்சிதிங்கும் பேய்கள்
உயிர் உள்ளவரையே பணம்
தெய்வமே ஆனாலும் மனித பிறவிகொண்டால்
தெய்தே வளருவர் பிறைநிலவைபோல்
மனிதன் மரிப்பான் தெய்வ புண்ணியம்சேர்ந்தால்
மனிதருள் சிறந்தவரிடம் செல்வான்
இறந்த மனிதன் மீண்டும் கருவாவான்
இதையே கருப்பு வட்டங்கள்என்பர்
வானம் முழுவதும் பத்து கிரகங்களும்
வயிரென கொள் ஆச்சாரியனின்
இல்லையேல் அங்க பத்து புலனென
இல்லைஎனகொள் அனைத்தும் விளங்கும்