வியாழன், 17 மார்ச், 2011

இனியவை

இனி இல்லை இனியவை என்பவன்
இருப்பதில்லை மரிப்பவனே ஆவான்
இனியவை இன்பத்தை தருதலால் உயிர்
இல்லாதபோது உலகம் அழியுமென்கிறான்
புனித ஆத்மா நல்லதே சொல்லும்
பாவ ஆத்மா அதன்தன்மையதே
நரகம் செல்ல விரும்புபவன் யாருமில்லை
நகரம் நரகமானால் கயமையரு
சொர்க்கம் செல்ல விரும்பாதவன் இல்லை
சொல்லா துயர்கொண்டவன் விரைவில்செல்வான்

விநாயகர் துதி

பாவும் பருப்பும் கரும்பும் வாழை கனியும்
இவை நான்கும் உனக்கு கலந்து தறுவேன்
கோலம் செய் துதியோனே
எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா

வெள்ளி, 11 மார்ச், 2011

சிற்றினம் சேராமை

அறிவிற்சிறந்த சான்றோர் இருக்க சிற்றினம்
அறியாமற் சேருதலும் தீதாம்
சேர்ந்தபின் கயமையில் உழண்டு கூச்சலிடுதல்
சேர்ந்தோர்கும் விழைந்தோற்கும் தீது
கயமையில் உழழ கூச்சலிடுவதைவிட கசடு
கழித்தல் காலத்திற்கும் நன்றாம்
நோய்நொடி பரவும் இக்காலத்தில் வாழ்வினாழ்
நோயில்லா கசடு கழி
உன் உடலைபற்றி உனக்கு தெரியாததா
உன்னை கவனித்துகொள் உலகம்னன்றாகும்
உன் உடலை பற்றி அறிய
உன்னால் கூடும் அத்தகுதிகாவதுபடி
படி வேலை செய் மீண்டும்படி
படிப்பு உன்னை உயர்த்தும்
சிற்றினம் சேராமல் படிப்பவன் அறிவு
சிறிய பேதளிபைகூட தராது
அவ்வாறல்லாதவன் ஏகற்றும் கல்லாதவனே ஆவான்
அவனறிவு ஏஞ்ஞான்ரும் இருப்பதில்

ஞாயிறு, 6 மார்ச், 2011

மனிதபிறவிஎதற்கு

உன் செயல்களை சீரியதாக்கி தவறுகளை
திருத்தி இறைநிலை பெறவே
இம்மை மறுமை இடைக்காலம் அனைத்திலும்
தீரும் உன் பாவமெல்லாம்
பாவம் எல்லாம் தீர்த்து விட்டு
பார் போற்ற வாழ்
புண்ணியம் கோடி பெற்று குணமுடனே
நண்ணியமாகுக நண்பர் எல்லாம்
தவறுகளை கலை தொடர்தவறை நீக்கு
தவம்தான் வரம் பெரும்யாங்கும்

செவ்வாய், 1 மார்ச், 2011

கேள்வியறிவு

கற்றல் கேள்வியறிவை தறுவிக்கும் கேள்வியோ
கற்ககற்க தூண்டும் அவ்வளவேஉலகம்
கேள்விக்கு பதில் பதிலால் ஆக்கம்
கேள்வியாக்கதால் பெரும்பயன் பெறுவோர்க்கு
அதுமட்டுமன்றி வேலை வேகமாய் விறுவிறுப்பாக
அதுமட்டுமன்றி உலக சுபீக்ஷம்
எல்லாவற்றிற்கும் கேள்வியறிவு அவசியம் தகுதியல்லாதவன்
என்கேட்டும் மதியாதார் சான்றோர்
எடுதுகொள்வர் அவர்தம் கேள்வியை அவர்தாம்
எடுபடமாட்டார் சான்றோர் அவையில்