சனி, 8 ஜனவரி, 2011

தேவ வசனம்

ஏசு இன்றும் என்றும் என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார் - ஏசு சொல்கிறார் என்னையன்றி வேறொருவனும் பிதாவினிடத்தில் வரான். அவரை பின்தொடர்ந்தவர்கள் ஒரு போதும் கெட்ட காரியங்களுக்கு துணைபோக மாட்டார்கள். இன்பம் துன்பம் மகிழ்ச்சி சோகம் என்ற எதிர்மறையாக உள்ள வாழ்க்கை ஏசுவை விசுவாசித்தால் சுபிக்ஷமாகும். பரமபிதாவான நம் ஏசு எல்லா நல்ல காரியங்களுக்கும் துணை நிற்பார். மனநிம்மதி உடையோர் பாக்கியவான்கள் அவர்கள் எப்பொழுதும் தேவனின் அன்பை பெறுவார்கள். ஏசுவை துதிக்கிறவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். இறக்கமுள்ளோர் பாக்கியவான்கள் தேவன் அவர்களுக்கு சமீபமாய் இருக்கிறார். தேவன் சொல் என்றென்றும் மாறாததாய் இருக்கிறது. நீ இப்பொழுது இருப்பதை போல் ஆயிரமடங்கு உன்னை மேம்படசெய்வேன் . பார்க்கும்போதே இரக்கமாய் உள்ளவர்கள் உள்ளத்தில் தேவன் குடியிருக்கிறார். தேவனிடம் நீ உன்னை ஒப்புகொடு அவர் உன் கவலைகளை போக்குவார். உன்னை சுதந்தரிப்பார். பாவ மூட்டைகளை சுமக்காதீர் சைத்தானின் பிடியில் சிக்காதீர் அடுத்தவரை ஏமாற்றி பிழைக்காதீர். எது ஒருவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது அவனுக்கே விதிக்கப்பட்டிருகிறது. எது மற்றவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது எல்லோருக்கும் விதிக்கப்படாது. ஞானத்தின் ஒளியே தேவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக