ஆயிரத்தி தொலயிரத்தி எழுபத்தி எட்டு ஜனவரி பதிரெண்டு கேசவனுக்கும் சகுந்தலா அம்மையாருக்கும் இரண்டவது மகனாக பிறந்தேன் . என் தந்தையாருக்கு என் மேல் மிகுந்த பிரியம் தோள்களில் தூக்கிக்கொண்டு செல்வார். தூக்கி தூக்கி போட்டு பிடிப்பார். அப்போது மின்சார வசதி கிடையாது வேயர்வைகு விசிறி மட்டும்தான் . நெறைய பேர் படம் பார்பவர்கள் எங்கள் வீட்டு வழியாக செல்வர் படம் நல்ல இருந்ததா பாட்டு நல்லா இருந்ததா என்று அவர்களிடம் கேட்பார் . எல்லோரும் மகிழ்ச்சியுடன் செல்வர் . என் தாயாருக்கு அப்போதும் சமைக்க தெரியாது புளியோதரையில் உப்பை கொஞ்சம் அதிகமாக போட்டால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துவிடும் என் தாயாருக்கு ரத்தம் வரும் வரை அடித்து போட்டுவிடுவார் . பிறகு கோபம் தீர்த்தவுடன் தஞ்சாவூர் சென்று என் தாயாருக்கு வேண்டியதையெல்லாம் முடிந்ததை வாங்கிக்கொண்டு வருவார்கள் .
கோடாலி கருப்பூர் ஜெயம்கொண்டம் உடையார்பாளையம் அணைக்கரை தஞ்சாவூர் என பல்வேறு இடங்களுக்கு மாற்றுதல் வேலை பெற்றார் . அந்த இடங்கள் எல்லாம் இருந்தவர்கள் கொஞ்சம் சண்டை வந்துவிட்டாலே போய் அருவாள் எடுத்துக்கொண்டு வெட்ட வந்துவிடுவார்கள் .ஹேத்மச்தூர் வேலை பார்த்தார் படாத கஷ்டமில்லை . ஒரு வழியாக வல்லத்திற்கு வந்தோம் சண்டை சேவல் வளர்த்தார் நானும் அவருடன் சென்று சிறு வயதில் சண்டைகோழிக்கு மண்புழு மண்ணை தோண்டி எடுத்து தீனியாக போடுவோம் . எல்லா போட்டியிலும் எங்க சேவல்தான் ஜெயிக்கும் . கழிப்பிட வசதி கிடையாது குளத்திற்கு மலம் கழிக்க சென்றால் தேள்களாக பாம்புகளாக கிடக்கும் நீ பயப்படாதடா என்று என்னை முதுகில் தூக்கிக்கொண்டு தாண்டி தாண்டி செல்வார் என்னை கரையில் உட்கார வைத்துவிட்டு குளிப்பார் குட்டி குட்டி மீன்கள் வந்தால் கூட நைனா பாம்பு தேளு என்று அழுவேன் இர்ரா வந்துடறேன் என்று குளித்துவிட்டு என்னையும் குளிப்பாட்டி விட்டு அழைத்து வருவார் . இதுல போய் குளிக்கலாமா என்பேன் அதற்கு கமபோசற்ற என்பார் .
என் தந்தையார் இருந்த காலத்தில் இருந்து சிருஷ்டி அவருடன் தோன்றியது எனக்கும் அவரும் நான் இடை செய்தேன் அதை செய்தேன் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று குடித்துவிட்டு என்னை தள்ளினார் நான் போய் அம்மி கல்லில் விழுந்தேன் நெற்றியில் ரத்த காயம் என் அம்மா மனுசனா நீ சின்ன புள்ளைய போய் அடிக்கிறயே என்று அடிபட்ட நெற்றியில் மஞ்சள் தடவி சரி என்று உனக்கு என்னடா வேணும் அவன்ட்ட கேட்ட நல்ல ஸ்கூல் ல சேர்த்து படிக்க வைக்கிரியன்னு நைநாட்ட கேளடா என்னிடமிருந்து சரி நைனா சூ தை டிரஸ் பாக் புக்ஸ் எல்லாம் கேளடா நைனா சூ சூ மா மா என்று விட்டு என்னம்மாவின் நகைகளை அடகு வைத்துவிட்டு சம்பளத்தையும் போட்டு எல்லாம் வாங்கிகொண்டு வந்தார் . அழுது கொண்டே ஜாய் நர்சரி ஸ்கூல் முதல் நாள் போனேன் எல்லாம் சீக்கிரமாக முடிந்தது ஸ்போர்ட்ஸ் டே ரன்னிங் பையை கூட யாரிடமும் கொடுக்காமல் தூக்கிக்கொண்டு ஓடினேன் பாதிவழியில் இடறி விழுந்து முட்டிக்காலில் ரத்தம் ஆறுதல் பரிசு பென்சில் அடுத்த வருடம் படிக்க வைக்க யூ .கே .ஜி பணம் கட்ட முடியவில்லை . தீபாவளி வந்ததது படிக்க வச்சான் இல்ல அந்த டிரஸ் போட்டுக்க அதான் உனக்கு தீபாவளி டிரஸ் அழ என் நைனா ஆரம்பிக்க கண்ணீர் பார்த்தேன் சரி அழுவாத நான் அந்த டிரஸ் சே போட்டுக்கிறேன் . இர்ராஹ் நான் போய் வெடி வாங்கிட்டு வந்துடறேன் . ஐயா வெடின்ன என்ன தீப்பெட்டி மத்தாப்பு சாட்டை போயிட்டு வாங்க நைனா . இந்த வருஷம் எப்படி ஸ்கூலில் சேர்க்க போறேனோ தெரியலே ஆண்டவா நீயிருக்கியா ? நடிக்கிருயா நிறைய காசு கிடைக்கும் நல்லா படிக்கிலாம் சரி நைனா . என் தந்தை ஆயிரத்தி தொள்ளயிரதி என்பதில் இறந்தார். இந்த சின்ன பிள்ளைய போய் நடிக்க வைக்கிறான் என்ன பாடு படுது பாரு ஏய் என் புள்ள சாமிடி போங்கடி அவனுக்கு ஒன்னும் ஆகாது . சண்டை சேவல் போட்டியில் தொருக்கொண்டே இருந்தவர் சொளிமுது படையாச்சி அதுவுமில்லாமல் அவன் வீராதிவீரன் என்று சொல்லும் அளவுக்கு சண்டை அடிதடி கடைசியில் யாரோ ஒரு கோஷ்டியினர் சரமாரியாக அரிவாளால் போறடியில் அடித்து வெட்டிவிட்டு தப்பிவிட்டனர் டாக்டர்கள் ரத்தம் நிறைய போயிருக்கு பிழைக்கமாட்டார் என்று சொல்லிவிட ஜீப்பில் டான்க் பில் பண்ணியாஹ் போலீஸ் காரர் . என் தந்தை மற்றும் என் தாய் என் அண்ணன் நான் ஜீப் எங்கெங்கோ சென்றது போலீஸ் எவ்வளவு டீஸல் இருக்கு திரும்பி போயிடலாம் சார் ரைட் வண்டிய திருப்பு வழியெங்கும் எப்படிமா எப்படிமா என் தாய் அழுகை என் தாய் அழுவதை பார்த்துவிட்டு ரத்தம் உள்ள மேல் வெள்ளை துணியை நான் கலால் எடுத்து என் தந்தை முகத்தை பார்க்க என் அண்ணன் சும்மா இருடா என்று சொல்ல காற்றில் முகத்து துணி விலக என் தந்தை முகத்தில் மூக்கில் வாயில் தலையில் ரத்தமாய் இருந்தது . என் அன்னை அய்யனார் கோயிலில் தன் கண்ணாடி வளையல்களை உடைக்க மஞ்சள் கயிறு அறுத்தார் என்னிடம் என் தாலி யை பிடிக்காதே சோனேன் என் தாலி அருதிட்டியிய அழுகை ஒரே அழுகை .எங்கள் வீடு பக்கத்து வீடு மங்களம் தோதில்ல சரி அந்த மரத்திற்கு அடுத்து உள்ளத நீ வச்சிக்கோ போ முன்னமேயே அருவா தீட்டும்போது . எதிரே உள்ள வீடு அத வித்திட்டேன். நான் செத்து போனா என் குடும்பத்துக்கு பத்தாயிரம் கிடைக்கும் அவ்வளவு வேலை கஷ்டப்பட்டு பர்ர்த்திருக்கேன் என் தந்தை அக்கிழவியிடம் அதை பார்த்தாலே எரிச்சலை கிளப்பும் . சனியன் எங்க எடத்த புடுங்கிட்டு எங்க அப்பவ வச்சாப்பு விட்டு கொன்னுபுடிச்சி என்று அதை வெறுப்பேன் . என் தந்தை இறந்த அடுத்த நாள் தினத்தந்தியில் மாட்டை குளிப்பாட்ட ஆற்றிற்கு சென்ற வாலிபர் மாடுகளை கட்டுபடுத்த முடியாமல் ஆற்றில் மூழ்கி மரணம் என்ற பொய் செய்தி
அதான் வெளியில போகவே பிடிக்காது யாரையுமே பிடிக்காது எதுவுமே பிடிக்காது. அபோதிலி ருந்து இப்போது வரை அப்பாவின் ஆத்மா அன்புடன்
கே .சபரிகிரிசன் .
திங்கள், 7 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
haai ... new bloggy ? ... velcom yaa ... throw ur sorrows @ first ... keep on going ...
பதிலளிநீக்குin tanjore, where r u now ?
How can i throw loss of my daddy. It's true crutial when the poorness in childhood as Avvaiyar said. My entire life way become superior one if he live now means my daddy. I am in Vallam near Thanjavur
பதிலளிநீக்கு